ஏரியூர், ஜன.06:
தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாலை பகுதியில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” முகவர்கள் கூட்டம் நேற்று (ஜனவரி 06) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அளவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்கு வழங்கியுள்ள சாதனைகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களை வீடு வீடாக எடுத்துச் சென்று பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்றும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க கட்சி தொண்டர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்றும் திமுக தொகுதி பார்வையாளர் பாரி வலியுறுத்தி பேசினார்.
இக்கூட்டத்தில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் சோலைமணி, ஏரியூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி, துணை ஒன்றிய செயலாளர் சின்னு, மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் துரைசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சாந்தரூபன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் தனபாலன், ஒன்றிய கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் முருகேசன், மாணவரணி அமைப்பாளர் நஞ்சப்பன், கிளைச் செயலாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணி, நாராயணன், நாகப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கூட்டத்தில் பங்கேற்று, வருங்கால தேர்தல் பணிகளில் இணைந்து செயல்பட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

.jpg)