பாப்பாரப்பட்டி, ஜன.23:
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளதை வரவேற்று, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். பாப்பாரப்பட்டி தவெக கட்சியினர் சார்பில் நடைபெற்ற இந்த மகிழ்ச்சி நிகழ்வுக்கு நகர செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் கட்சிக்கு கிடைத்துள்ள சின்னம் குறித்து மகிழ்ச்சியும் உற்சாகமும் வெளிப்படுத்தப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள், விசில் சின்னம் மக்கள் மத்தியில் எளிதில் அடையாளம் காணப்படும் வகையில் இருக்கும் என்றும், வருங்கால அரசியல் பயணத்தில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியுடன் செயல்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

.jpg)