தருமபுரி, ஜன. 23:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 16-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.01.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கி, நான்கு ரோடு வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, வாக்காளர் உரிமை மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இரா. காயத்ரி, நகராட்சி ஆணையர் திரு சேகர், கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குநர் திருமதி ராமலட்சுமி, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. மனோகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு வெ. லோகநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதி சந்திரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி தே. சாந்தி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் செல்வி ப. அம்பிகா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)