பாப்பாரப்பட்டி, ஜன.08:
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, தவெக (தமிழக வெற்றி கழகம்) சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இம்முகாமை சிறப்பாக நடத்தினார். இதில் தவெக தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.
முகாமில் பங்கேற்ற தொண்டர்கள் தெரிவிக்கையில், தலைவர் விஜய் அரசியல் பயணத்தை தொடங்கியதையடுத்து இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என அறிவித்தது தனிப்பட்ட முறையில் வேதனை அளித்தாலும், அவர் எடுத்துள்ள முடிவையும் அவர் செல்லும் பாதையையும் முழுமையாக ஆதரிப்பதாகவும், அவரது பயணம் வெற்றிபெற துணை நிற்போம் என்றும் உறுதியளித்தனர்.
இந்த ரத்ததான முகாமில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

