Type Here to Get Search Results !

ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்.


தருமபுரி, ஜன.08:


தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காலபைரவர் திருக்கோயில் அருகே, சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற முதியவர் ஒருவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அவர் குறித்து எந்த அடையாள விவரங்களும் கிடைக்கவில்லை.


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த அவரது உடலை மனிதநேயத்துடன் நல்லடக்கம் செய்ய மை தருமபுரி அமைப்பினர் முன்வந்தனர். அதியமான் கோட்டை காவல் நிலைய காவலர், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் சையத் ஜாபர் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து முதியவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, முறையான வகையில் நல்லடக்கம் செய்தனர்.


மை தருமபுரி அமரர் சேவை அமைப்பின் மூலம் இதுவரை 187 ஆதரவற்ற புனித உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மனிதநேயப் பணிக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies