Type Here to Get Search Results !

வெனிசுலா அதிபர் மதூரா கைது: அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.


தருமபுரி, ஜன.08:


லத்தின் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதூராவை கைது செய்ததாக கூறப்படும் அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கையை கண்டித்து, தருமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜெ. பிரதாபன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றியவர்கள், லத்தின் அமெரிக்காவில் வெனிசுலா நாட்டில் பொதுவுடமை கொள்கையின் அடிப்படையில் மறைந்த தலைவர் சாவோஸ் ஆட்சிக்குப் பின், நாட்டு வளங்கள் மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், குறிப்பாக உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த கச்சா எண்ணெய் வளம் வெனிசுலாவில் அதிக அளவில் இருப்பதால், அதனை கைப்பற்ற அமெரிக்கா தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டினர்.


சாவோஸ் மறைவுக்குப் பிறகு நிக்கோலஸ் மதூரா தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அமெரிக்க ஏகாதிபத்திய அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெனிசுலா மீது அத்துமீறி நடவடிக்கை எடுத்து, அதிபர் மதூராவையும் அவரது மனைவியையும் கைது செய்ததாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதூராவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இவ்விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜி.மாதையன், சி.பாலன், மாவட்ட பொருளாளர் அலமேலு, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ரவி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies