தருமபுரி – ஜனவரி 16:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் அசோக்குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, புதுப் பானையில் பொங்கல் வைத்து, செங்கரும்புடன் தமிழர் பாரம்பரிய முறையில் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். சாதி, மத, பதவி வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒரே இடத்தில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடிய இந்த நிகழ்ச்சி, சமத்துவமும் ஒற்றுமையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் தனி தாசில்தார் சேதுலிங்கம், துணை தாசில்தார்கள் துரைவேல், உமாபதி, வட்ட வழங்கல் அலுவலர் சிங்காரவேலன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் நில அளவை பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்த சமத்துவ பொங்கல் விழா, அலுவலக பணியாளர்களிடையே நல்லிணக்கம் மற்றும் சமூக சமத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தும் நிகழ்வாக அமைந்தது.

.jpg)