Type Here to Get Search Results !

பாலக்கோடு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தருமபுரி – ஜனவரி 12:


தருமபுரி கிழக்கு மாவட்டம், பாலக்கோடு தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 200 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செக்கோடி மோட்டுப்பட்டி பச்சியம்மன் கோவில் அருகே சிறப்பாக நடைபெற்றது.


இந்த விழாவிற்கு முன்னாள் மாவட்ட செயலாளரும், மாநில தொழிலாளர் அணி துணைத் தலைவருமான பி.என்.பி. இன்பசேகரன் (Ex MLA) தலைமை தாங்கினார். பாலக்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ. கருணாநிதி முன்னிலை வகித்தார். பாலக்கோடு தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர். செல்வம் ஏற்பாட்டிலும், எஸ். சந்திரசேகர் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 200 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பி.என்.பி. இன்பசேகரன் வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.


பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான என். செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். மேலும், தருமபுரி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் க. அன்பரசன், பாலக்கோடு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் எல்.டி. பழனி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் காமராஜ் சித்ரா, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சித்ரா சின்னபையன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பூமணி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆசை தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை வாழ்த்தி உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, பேரூர், ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies