Type Here to Get Search Results !

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அரூரில் சமத்துவ பொங்கல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தருமபுரி – ஜனவரி 12:


தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், அரூர் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


இந்த விழாவிற்கு அரூர் நகர செயலாளர் முல்லை ரவி தலைமை தாங்கினார். தொண்டு நிறுவன செயலாளர் வாசுகி வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்து, 300 மகளிருக்கு அறுசுவை உணவு வழங்கினார். மேலும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பித்தார்.


இந்த நிகழ்ச்சியில் அரூர் நகராட்சித் தலைவர் இந்திராணி தனபால் மற்றும் நகராட்சி துணைத் தலைவர் சூர்யா.டி. தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆர். வேடம்மாள் (Ex MLA), சி. கிருஷ்ணகுமார், கே. சென்னகிருஷ்ணன், எஸ். ராஜேந்திரன், ஈ.டி.டி. செங்கண்ணன், வே. செளந்தரராசு, சி. தென்னரசு, எம். ரத்தினவேல், எஸ். சந்தோஷ்குமார், எஸ். கலைவாணி, கு. தமிழழகன், சிட்டிபாபு, சி.எம். சேகர், ஜி. சரவணன், பி.வி. சேகர், ஜி. பெருமாள், கே. செல்வதயாளன், மதியழகன், என்.எம்.எஸ். முருகேசன், ஜே.சி.பி. கே. மோகன், லோகேஷ், கமலக்கண்ணன், ஜே. பூசக்காரன், டி. கனேசன், கே. திருவேங்கடம், செந்தில்குமார், யாரப், அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் 300-க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies