தருமபுரி – ஜனவரி 13:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா, தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழர் பாரம்பரியத்தை போற்றும் வகையில், மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மருத்துவமனை வளாகத்தில் வண்ண கோலமிட்டு, கரும்பு, வாழை, மஞ்சள் ஆகியவற்றுடன் புதுப்பானையில் பொங்கல் வைத்து “பொங்கலோ… பொங்கலோ…” என்ற முழக்கத்துடன் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் பாரம்பரிய விளையாட்டுகளான உறியடித்தல், கோலப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அனைவரும் உற்சாகமாக பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கரும்பு மற்றும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர் ஈஸ்வரி, மருத்துவர் சசிரேகா, மருத்துவர் தனசேகரன், மருத்துவர் பாலாஜி, மருத்துவர் வினோத், மருத்துவர் நவீன், மருத்துவர் ஜெகதீசன் உள்ளிட்ட மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகேசன், முருகன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சாதி, மதம், பதவி வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடப்பட்ட இந்த சமத்துவ பொங்கல் விழா, சமூக ஒற்றுமையும் பணியாளர் நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

.jpg)