தொப்பூர், ஜன. 06:
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் National Highways Authority of India (NHAI) சார்பில் நடத்தப்பட்ட 37-ஆவது சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியான “SADAK SURAKSHA – JEEVAN RAKSHA” (சாலை விதிகளை மதிப்போம் – உயிர்களை பாதுகாப்போம்) என்ற தலைப்பிலான நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் தொப்பூரில் செயல்பட்டு வரும் Krishnagiri Thoppur Toll Road Private Limited (KTTRL) தொப்பூர் அலுவலகத்தில் பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் NHAI சார்பில் Er. ரவி (Team Leader), KTTRL Project Head S. நரேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் பாலசுப்பிரமணியம் (RTO), சாலை பாதுகாப்பு மேலாளர் ஞானசேகரன், முருகன், பொறியாளர்கள் சதீஷ் மற்றும் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த முக்கிய உரைகளை நிகழ்த்தினர். மேலும், NDSO – எண்ணங்களின் சங்கமம், V4U அமைப்பைச் சேர்ந்த பிரகாஷ், மை தருமபுரி அமைப்பின் விஷ்வா மற்றும் ஜாபர் ஆகியோரும் கலந்து கொண்டு பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அதேபோல், ஆதி பவுண்டேஷன் நிறுவனத்தின் நிறுவனர் திரு. பெ. ஆதிமூலம் மற்றும் அதன் உறுப்பினர்கள் சங்கர் ரெட்டி, இளஞ்செழியன், சிரஞ்சீவி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆதரவு வழங்கினர். நிகழ்ச்சியின் போது, தொப்பூர் மற்றும் வெள்ளக்கல் பகுதிகளில் பொதுமக்கள் சாலையை கடக்கும் போது பெடஸ்ட்ரியன் கிராசிங் வழியாகவும், நடைபாதைகளை பயன்படுத்தியும் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கைப்பேசி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் சில நிமிடங்கள் மட்டுமே மிச்சமாகும்; ஆனால் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி பேசினால் முழு வாழ்க்கையை பாதுகாக்க முடியும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாலை பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வை பொதுமக்களிடையே உருவாக்கும் வகையில் மிகுந்த பயனுள்ளதாக அமைந்ததாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

.jpg)