தருமபுரி, ஜன. 08:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரான தி. வேல்முருகன் தலைமையில், அரசு உறுதிமொழிகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் இன்று (07.01.2026) நடைபெற்றது. இந்தக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வருவாய்துறை, கூட்டுறவுத் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்ட அரசு நலத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, 89 பயனாளிகளுக்கு ரூ.2.24 கோடி (₹2,24,68,460) மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- வருவாய்துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா ஆணைகள்,
- பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.33,460 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள்,
- கூட்டுறவுத் துறை சார்பில் 23 பயனாளிகளுக்கு ரூ.26.73 இலட்சம் மதிப்பீட்டில் பயிர்கடன்கள்,
- ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 36 பயனாளிகளுக்கு ரூ.22.32 இலட்சம் மதிப்பீட்டில் இ-பட்டாக்கள்,
- மாவட்ட இயக்க மேலாண்மை அலகு – மகளிர் திட்டம் சார்பில் 10 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.66 கோடி மதிப்பீட்டில் கடனுதவிக்கான காசோலைகள்
இந்த ஆய்வுக் கூட்டத்தில், சேலம் (மேற்கு) சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் ரா. மணி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சா. மாங்குடி, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. நல்லதம்பி உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள், மேம்பாட்டு பணிகள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அளித்த உறுதிமொழிகளின் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிறைவடைந்த பணிகள் குறித்து விளக்கம் பெறப்பட்டதுடன், நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி. சீனிவாசன், துணைச் செயலாளர் ஸ்ரீரா. ரவி, சார்புச் செயலாளர் திருமதி த. பியூலஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் உள்ளிட்ட அனைத்து துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

.jpg)