Type Here to Get Search Results !

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: தருமபுரியில் ஆட்சியர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.


தருமபுரி – ஜனவரி 09, 2026

தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இப்பேரணியை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


பேரணியைத் தொடங்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், சாலை என்பது மனிதர்களை முன்னேற்றத்திற்குக் கொண்டு செல்லும் பாதையாக இருப்பதோடு, அலட்சியம் ஏற்பட்டால் உயிரைப் பறிக்கும் அபாயமாகவும் மாறும் என தெரிவித்தார். ஒவ்வொரு சாலை விபத்தும் ஒரு குடும்பத்தின் கனவுகளை சிதைப்பதாகவும், இவ்விபத்துகள் விதியால் அல்ல, மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்படுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.


மேலும் அவர் பேசுகையில்,

  • இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்,

  • நான்கு சக்கர வாகனங்களில் முன், பின் இருக்கை என பேதமின்றி சீட் பெல்ட் அணிய வேண்டும்,

  • மதுபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது,

  • கைபேசி பயன்படுத்திக்கொண்டு வாகனம் ஓட்டுவது உயிருக்கு மிகப்பெரும் ஆபத்து,

  • அதிக வேகம் சுவாரஸ்யமாக தோன்றினாலும் அது உயிர்க்கு எதிரியானது


என சாலை விதிகளின் அவசியத்தை எடுத்துரைத்தார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், இளைஞர்கள் வேகத்தை விட பொறுப்பை முக்கியமாகக் கருத வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


இன்று நடைபெற்ற இந்த தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தொடங்கி பாரதிபுரம் வரை சென்று நிறைவடைந்தது.


இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தருமபுரி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் பி. நாகராஜி உள்ளிட்ட துறை அலுவலர்கள், சாலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies