தருமபுரி, ஜன. 09:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டுத் திருவிழா “இது நம்ம ஆட்டம்” என்ற தலைப்பில், ஊராட்சி ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில், 01.01.1991 முதல் 31.12.2009 வரை பிறந்த 16 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் வீரர்-வீராங்கனைகளுக்காக ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 22.01.2026 முதல் 25.01.2026 வரை நடைபெறவுள்ளன.
ஊராட்சி ஒன்றிய அளவில்:
தடகளம் (100 மீ), குண்டு எறிதல் – இருபாலருக்கும்
கபாடி, வாலிபால் – இருபாலருக்கும்
கேரம் (இரட்டையர்), கயிறு இழுத்தல் – இருபாலருக்கும்
தெரு கிரிக்கெட் – ஆண்களுக்கு மட்டும்
எறிபந்து – பெண்களுக்கு மட்டும்
என்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகளில் முதலிடம் பெறும் தனிநபர் மற்றும் அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவர்.
பரிசுத் தொகை விவரம்:
ஊராட்சி ஒன்றிய அளவு:
முதல் பரிசு – ரூ.3,000
இரண்டாம் பரிசு – ரூ.2,000
மூன்றாம் பரிசு – ரூ.1,000
மாவட்ட அளவு:
முதல் பரிசு – ரூ.6,000
இரண்டாம் பரிசு – ரூ.4,000
மூன்றாம் பரிசு – ரூ.2,000
மாநில அளவு:
முதல் பரிசு – ரூ.75,000
இரண்டாம் பரிசு – ரூ.50,000
மூன்றாம் பரிசு – ரூ.25,000
ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்-வீராங்கனைகள், தங்கள் சொந்த ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஒரு வீரர் அல்லது வீராங்கனை, தடகளத்தில் அதிகபட்சம் 2 ஈவெண்ட்கள் மற்றும் 2 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இணையதளத்தில் பதிவு செய்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

