பாப்பிரெட்டிப்பட்டி| ஜனவரி 01
நாமக்கல் முத்தமிழ் கலைச்சங்கம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 26-ஆவது ஆண்டு விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை செய்தவர்களை தேர்ந்தெடுத்து “தமிழ்நாட்டின் சிறந்த மாமனிதர்” விருதுகள் வழங்கப்பட்டன.
அதில், செங்கல் மாரி அவர்கள், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் என்ற வகையில், “சிறந்த பேரூராட்சித் தலைவர் – உழைப்பால் உயர்ந்த மாமனிதர்” என தேர்வு செய்யப்பட்டு, ‘தமிழ்மாமணி’ விருது, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், மிக மூத்த வயதாளராக இந்த விருதை பெற்ற தலைவர் செங்கல் மாரி அவர்களின் சேவை மனப்பான்மையும், பொதுநலப் பணிகளும் பாராட்டப்பட்டு, விழாவில் பங்கேற்ற அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

.jpg)