இண்டூர் | டிச.31:
இண்டூர் பகுதியில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள இண்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழக அரசின் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
இந்த முகாம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. முகாமில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், பொது மருத்துவம், இதயநலப் பரிசோதனை, உடல் ஊனமுற்றோர் பதிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. இதற்காக 50-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் பணியாற்றி, பொதுமக்களுக்கு இலவச பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், திமுக ஒன்றிய செயலாளர் வைகுந்தம், மாவட்ட மருத்துவர் அணி சக்திவேல், மாவட்ட விளையாட்டு துணை அமைப்பாளர் ரவி, விவசாய அணி கந்தசாமி, சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை மேற்பார்வையிட்டனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்றனர்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு தொடர்ந்து நடத்தி வரும் இந்த மருத்துவ முகாம்கள், கிராமப்புற மக்களுக்கு பெரிதும் பயனளிப்பதாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

.jpg)