நல்லம்பள்ளி, ஜன. 22:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 19 ஊராட்சிகளில் ஒகேனக்கல் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வரும் நல்லம்பள்ளி, பாலஜங்கமனஅள்ளி, நாகர்கூடல், பூதனஅள்ளி, பாகலஅள்ளி, சிவாடி, பாளையம்புதூர், டொக்குபொதனஅள்ளி, ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, மாணியதஅள்ளி, அதியமான்கோட்டை, தடங்கம், மாதேமங்கலம், ஜெட்டிஅள்ளி, மிட்டாரெட்டிஅள்ளி, லலிகம், தின்னஅள்ளி, நார்த்தம்பட்டி ஆகிய 19 ஊராட்சிகளில், 23.01.2026 காலை 08.00 மணி முதல் 24.01.2026 பிற்பகல் 02.00 மணி வரை ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும்.
இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் தேவையை முன்னதாகவே சேகரித்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

.jpg)