தருமபுரி, ஜன.22:
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகின்ற 30.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம், தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அதியன் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, வேளாண்மை தொடர்பான தங்களது குறைகள், கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை நேரடியாக எடுத்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்து, உரிய தீர்வு காணும் நோக்குடன் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவதாகவும், இதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

.jpg)