Type Here to Get Search Results !

சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா: தருமபுரியில் 137 பயனாளிகளுக்கு ரூ.9.90 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தருமபுரி, ஜன.08:


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நிகழ்ச்சி இன்று (08.01.2026) மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. கவிதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்த விழாவில், மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 20 பயனாளிகளுக்கு ரூ.3.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், 103 பயனாளிகளுக்கு ரூ.5.76 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள், 2 பயனாளிகளுக்கு ரூ.13,400 மதிப்பில் சலவைப் பெட்டிகள், உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் 12 நபர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இவ்வாறு மொத்தம் 137 பயனாளிகளுக்கு ரூ.9.90 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.


நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. கவிதா, சிறுபான்மையினர் மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். கல்வி வளர்ச்சி சிறுபான்மையினரின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கு முக்கிய அடித்தளமாக இருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.


மேலும், சிறுபான்மையினர் பொருளாதார முன்னேற்றம் அடைய தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், கல்விக் கடன், சுயஉதவிக்குழு கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி குடும்ப வருமானத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு. பண்டரிநாதன், தனி வட்டாட்சியர் திருமதி. பார்வதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies