மொரப்பூர், ஜன.25:
மொரப்பூர் ரயில் நிலையத்தில் மங்களூர், பெங்களூர், நியூ டெல்லி மற்றும் மதுரை ஆகிய முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் நின்று செல்ல வேண்டுமென கோரி, மாண்புமிகு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் அவர்களை சென்னை, அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் தினசரி சந்தித்து வரும் பயண சிரமங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மொரப்பூர் ரயில் நிலையத்தில் நீண்ட தூர ரயில்கள் நின்று செல்லாததால், பயணிகள் சேலம், அரக்கோணம் போன்ற பெரிய நிலையங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு வருவதாகவும், இதனால் நேரம், செலவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் அதிகரிப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், மொரப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் கல்வி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வரும் நிலையில், ரயில் சேவைகள் மேம்படுத்தப்படுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கையை இந்திய ரயில்வே துறை கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த மனுவை த. விஷ்ணு பிரசாத், பாரதிய ஜனதா கட்சி தருமபுரி மாவட்ட துணைத் தலைவர் (Professional Cell) மற்றும் ரயில்வே சங்கத்தின் இணைச் செயலாளர், தருமபுரி மாவட்டம் ஆகியோர் வழங்கி, கோரிக்கையின் முக்கியத்துவம் குறித்து விளக்கமாக பேசினர்.
.gif)

.jpg)