தருமபுரி, ஜன.25:
தருமபுரி மாவட்டம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நேரடி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தனியார் செல்போன் உற்பத்தி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த முகாம், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு நிரந்தர மாதாந்திர வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் செயல்படும். இதில் 10, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.19,134/- சம்பளமாக வழங்கப்படும். மேலும், ESI, EPF, உணவு வசதி, போக்குவரத்து, சீருடை, பாதுகாப்பு காலணி மற்றும் தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளும் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் அமைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி. வெங்கடேஷ்வரன் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள ஆவணங்களுடன் நேரில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 93441 48085, 89390 04424, 93848 19083 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.gif)

.jpg)
