தருமபுரி, ஜன. 13:
மை தருமபுரி அமைப்பு சார்பில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைம்பெண்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி தருமபுரி நகரில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக ஆதரவற்றோர், ஏழைகள் மற்றும் சமூகத்தின் பின்தங்கிய மக்களுக்காக பல்வேறு மனிதநேய சேவைகளை தொடர்ந்து செய்து வரும் மை தருமபுரி அமைப்பு, இந்த ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பிக்கும் வகையில் ஏழ்மை நிலையில் உள்ள கைம்பெண்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ணன் கலந்து கொண்டு, கைம்பெண்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் புடவைகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். மேலும் மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் செந்தில் மற்றும் சையத் ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சி, கைம்பெண்களிடையே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்படுத்தியதுடன், சமூக பொறுப்புணர்வை வலியுறுத்தும் ஒரு முக்கிய மனிதநேய முயற்சியாக அமைந்தது.

.jpg)