தருமபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டம், மொரப்பூர் வட்டாரத்திற்கு உட்பட்ட கெலவள்ளி நடுநிலைப் பள்ளியில் இன்று இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு நாள் விழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் ச. சாக்கம்மாள் அவர்களின் வழிகாட்டலின் பேரில், உதவி தலைமையாசிரியர் சி. தீர்த்தகிரி தலைமையேற்று விழாவை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் இந்துமதி, தேவி, இரமேஷ், லட்சுமி, கார்த்திகா, பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.
விழாவில் பள்ளிப் புரவலர்கள் கிருஷ்ணன்ஐயா, வெங்கடேஷ், பெற்றோர் சபரிநாதன், ஊர்ப் பிரமுகர் பழனி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குடியரசு நாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.
மேலும், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, தேசிய உணர்வும் உற்சாகமும் நிறைந்த சூழலில் விழா இனிதே நிறைவுற்றது.
.gif)

.jpg)