கம்பைநல்லூர், ஜன. 27 :
தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளின் வீரத்தை போற்றும் வகையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூர் பேருந்து நிலையத்தில் வெகு எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டம், மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் க. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. கம்பைநல்லூர் பேரூர் பொறுப்பாளரும், பேரூராட்சித் தலைவருமான வடமலைமுருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். அரூர் நகராட்சித் துணைத் தலைவர் சூர்யா டி. தனபால் தொடக்க உரையாற்றினார். கூட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ஆ. மணி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர்கள் வி. வைதிலிங்கம், சஹா. விக்னேஷ், த. தங்கமுத்து ஆகியோர் மொழிப்போரின் வரலாற்று முக்கியத்துவம், தமிழ் மொழிக்காக உயிர்நீத்த தியாகிகளின் தியாகம் குறித்து உணர்வுப்பூர்வமாக உரையாற்றினர். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் பெ. சுப்ரமணி (Ex.MLA) மற்றும் PNP. இன்பசேகரன் (Ex.MLA) ஆகியோரும் சிறப்புரை ஆற்றினர்.
இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் ETT. செங்கண்ணன், M. ரத்தினவேல், R. வேடம்மாள் (Ex.MLA), கோ. சந்திரமோகன், வே. சௌந்தரராசு, சி. தென்னரசு, S. சந்தோஷ்குமார், நகர செயலாளர்கள் முல்லைரவி, நாட்டான் மாது, MP. கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் அரவிந்த், கௌதம், கிருஷ்ணமூர்த்தி, திருமலைவாசன், பிருந்தா, செல்வராஜ், கருணாநிதி, காவேரி, வைகுந்தம், மல்லமுத்து, மாசிலாமணி, கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர் S. ராஜேந்திரன், C. கிருஷ்ணகுமார், தொகுதி பார்வையாளர் K. குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
.gif)

.jpg)