Type Here to Get Search Results !

கெலவள்ளி ஊராட்சி ஜடையன் கொட்டாய் கிராமத்தில் புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு – எம்.பி. ஆ.மணி பங்கேற்பு.


கம்பைநல்லூர், ஜன.04:

தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் மேற்கு ஒன்றியம், கெலவள்ளி ஊராட்சி ஜடையன் கொட்டாய் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு விழா இன்று (ஜனவரி 05) நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி கலந்து கொண்டு, புதிய நியாயவிலைக் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு விலையில்லா உணவுப் பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.


இந்த நிகழ்வில் திமுகவின் ஒன்றிய செயலாளர்கள் எம். ரத்தினவேல், ஈ.டி.டி. செங்கண்ணன், பேரூராட்சி தலைவர் வடமலைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சார்பு அணி நிர்வாகிகள் கே. திருமால், எம். கவிதா, அருண் உதயசூரியன், ஐடி விங் நிர்வாகி ராஜ்கமல், நடேசன், சரவணன், ராசிதமிழ், செல்வம், குமரேசன், லோகேஷ் உள்ளிட்டோர் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை தொடங்கப்பட்டதன் மூலம், ஜடையன் கொட்டாய் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை எளிதாகவும், சீரான முறையிலும் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies