தருமபுரி, ஜன.04:
தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) நிர்வாகிகள், தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. மணி அவர்களை நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து 2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு நிகழ்வில், தருமபுரி மேற்கு திமுக நகர பொறுப்பாளர் கௌதம், அரசு ஔவையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்–ஆசிரியர் கழகத் தலைவர் சி. சந்திரமோகன் (Ex-MC), மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் டி.ஏ. குமார், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் எஸ். ரஹீம், நகர பொறுப்புக் குழு உறுப்பினர் (மேற்கு) மற்றும் நகர மன்ற உறுப்பினர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், நகர பொறுப்புக் குழு உறுப்பினர் (கிழக்கு) மற்றும் நகர மன்ற உறுப்பினர் ஏ. மாதேஸ்வரன், நகர பொறுப்புக் குழு உறுப்பினர் (கிழக்கு) நெசவாளர் அணி அமைப்பாளர் காசிநாதன், தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் அமைப்பாளர் டாக்டர் ஜெகன், நகர பொறுப்புக் குழு உறுப்பினர் (கிழக்கு) ஒருங்கிணைப்பாளர் கே. கனகராஜ் (Ex-MC), விளையாட்டு அணி அமைப்பாளர் அரி விக்னேஷ், நகர மன்ற உறுப்பினர் எம்.கே. பெருமாள், நகர பொறுப்புக் குழு உறுப்பினர் (கிழக்கு) மாதேஷ் என்கிற பாபு, நகர பொறுப்புக் குழு உறுப்பினர் (கிழக்கு) ரஜினி ரவி உள்ளிட்டோர் மற்றும் கழக உடன்பிறப்புகள் பலரும் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது, கட்சி பணிகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

.jpg)