Type Here to Get Search Results !

கரியம்பட்டி கிராமத்தில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 6000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி தொடக்கம்.


பென்னாகரம், ஜன.06:

 

பென்னாகரம் அருகே சத்யநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கரியம்பட்டி கிராமத்தில், நீண்டநாளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜையுடன் தொடக்கம் வைக்கப்பட்டது.


சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் கரியம்பட்டி கிராமத்தில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில், பொதுநிதியிலிருந்து ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.


இந்த பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பென்னாகரம் திமுக மத்திய ஒன்றிய பொறுப்பாளர் பச்சியப்பன், பென்னாகரம் திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.


மேலும், இந்த நிகழ்வில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சின்னசாமி, மாவட்ட பிரதிநிதி சிவகுமார், கிளை செயலாளர் மகேந்திரன், லோகநாதன், ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் ரெட் லட்சுமணன், நகர மாணவரணி அமைப்பாளர் அருள், ஒன்றிய அயலக அணி துணை அமைப்பாளர் காவிரி அப்பன், முன்னாள் தலைவர் ராஜசேகர், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் மாதப்பன், ரங்கசாமி, ரவி, மூர்த்தி, நாகராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுவதன் மூலம் கரியம்பட்டி கிராம மக்களின் குடிநீர் பிரச்சினை பெருமளவில் தீரும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies