தருமபுரி, ஜன.05:
சர்வதேச அளவில் பல்வேறு சமூக நல திட்டங்களை செயல்படுத்திவரும் JCI அமைப்பின் தருமபுரி பிரிவின் சமூக நலன் மற்றும் அரசின் வளர்ச்சி இலக்குகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து, JCI Dharmapuri தலைவர் JC நிரோஷா அன்பு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, ஜேசிஐ தருமபுரி சார்பில் செயல்படுத்தப்பட உள்ள “தீப்பொறி (THEEPORI) திட்டம்” குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கிராம நூலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கி, மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து கல்வி வளர்ச்சிக்கு பங்களிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜேசிஐ தருமபுரி மேற்கொள்ளும் சமூக சேவை முயற்சிகளை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் கவனமாகக் கேட்டு அறிந்ததுடன், அரசின் நோக்கங்களுக்கு ஒத்துழைக்கும் இத்தகைய திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்தார். இந்த ஆலோசனை சந்திப்பு, ஜேசிஐ தருமபுரியின் எதிர்கால சமூக நலத் திட்டங்களை வலுப்படுத்தும் வகையில் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

.jpg)