Type Here to Get Search Results !

ஜனவரி 29–30: கோயம்புத்தூரில் “International Textile Summit-360” சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு. – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.


தருமபுரி – ஜன. 08:


தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் “International Textile Summit-360” என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026 ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் கொடீசியா வளாகம், கோயம்புத்தூர் நகரில் நடைபெற உள்ளது.


தமிழ்நாட்டை 2030-ஆம் ஆண்டிற்குள் USD 1 Trillion பொருளாதார மாநிலமாக மாற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்கு இலக்கை அடைவதில் ஜவுளித் தொழில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இம்மாநாட்டில்

  • கருத்தரங்குகள் (Conference)

  • கண்காட்சி (Exhibition)

  • வாங்குபவர் – விற்பவர் சந்திப்பு (Reverse Buyer Seller Meets)

  • அழகுநயப்பு காட்சி (Fashion Show)


ஆகியவை இடம்பெறுகின்றன. மேலும், சுமார் 100 காட்சியரங்குகள் கொண்ட பெரிய அளவிலான கண்காட்சியும் நடைபெற உள்ளது.


இந்த கண்காட்சியில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளித் தொழில் நிறுவனங்கள் 13.01.2026க்குள் ddtextilessalemregional@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகள் அதிகரித்து, தமிழ்நாட்டின் ஜவுளித் தொழில் வளர்ச்சி மேலும் வேகமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:
மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல் துறை,
1A–2/1 சங்ககிரி மெயின் ரோடு, குகை, சேலம் – 636006
தொலைபேசி : 0427-2913006


இந்த கண்காட்சியில்
Spinning, Fabric, Garments, Home Textiles, Integrated Manufacturers, Brands from Tamil Nadu, Technical Textiles, Sustainability & Recycling, Raw Material / Recycled Textile / Man-Made Fibre
ஆகிய பிரிவுகள் இடம்பெற உள்ளதால், அனைத்து ஜவுளித் தொழில் முனைவோர்கள் மற்றும் சங்கங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies