தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிகரலஅள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம் 38-ம் ஆண்டு திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, ஆலய தர்மகர்த்தா அழகேசன் அவர்கள், மேளதாளங்கள் முழங்க செண்டை மேள இசையுடன், வானவேடிக்கைகள் நடுவே ஆலய முன்பு அமைந்துள்ள பிரம்மாண்ட கொடிமரத்தில் கொடியேற்றி வைத்து சிறப்பு பூஜைகள் செய்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊர் செட்டியார் தேவன், நாலூர் செட்டியார் நஞ்சா செட்டி, செயலாளர் அப்பையன், பொருளாளர் கணேசன், 24 மணை தெலுங்கு செட்டியார்கள் மாவட்ட தலைவர் குமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவிழா தொடக்க நாளில், கோவிலில் சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர்.
திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் விழாக் குழுவினர் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர். தொடர்ந்து வரும் நாட்களில் பல்வேறு பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.
.gif)

.jpg)
.jpg)