இந்த ஆண்டு திருவிழாவை சிகரலஅள்ளி பகுதியைச் சேர்ந்த ஈஸ்ட் கோஸ்ட் ஹாட் சிப்ஸ் வணிகர்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றனர். விழாவையொட்டி, கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டதுடன், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேக பூஜைகள் மற்றும் மூன்று வேளையும் சிறப்பான அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆடல்–பாடல் நிகழ்ச்சிகளுடன் பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை, பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், பூக்கரகம் ஊர்வலமாக கொண்டு வருதல் உள்ளிட்ட பாரம்பரிய வழிபாட்டு நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. திருவிழா நடைபெறும் மூன்று நாட்களிலும், முழுநேர அன்னதானம் ஈஸ்ட் கோஸ்ட் ஹாட் சிப்ஸ் வணிகர்கள் சார்பில் வழங்கப்படுகிறது.
இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் விழாக் குழுவினர் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.
.gif)

.jpg)