தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 77-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி, பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பெற்றோர்–ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரமோகன், பொருளாளர் நாட்டான் மாது மற்றும் பெற்றோர்–ஆசிரியர் கழக உறுப்பினர்கள் டி.ஏ.குமார், வெல்டிங் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் முருகன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாடி, தேசப்பற்றுடன் விழாவை கொண்டாடினர்.
மாணவிகளின் உற்சாகமான பங்கேற்புடன் நடைபெற்ற இந்த குடியரசு தின விழா, தேசபக்தி உணர்வையும் ஜனநாயக மதிப்புகளையும் நினைவூட்டும் வகையில் அமைந்தது.
.gif)

.jpg)