தருமபுரி, ஜன.08:
தருமபுரி மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன. தருமபுரி நகரம் மற்றும் தருமபுரி மேற்கு ஒன்றியத்தின் சார்பில் நடைபெறும் இப்போட்டிகளில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தருமபுரி கிழக்கு மாவட்டம் – தருமபுரி நகர திமுக சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இளைஞர்களுக்கான வாலிபால் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றன. அதேபோல், தருமபுரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆட்டுக்காரப்பட்டியில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த விளையாட்டு போட்டிகளை தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. மணி துவக்கி வைத்து, போட்டிகளை பார்வையிட்டார். போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் இடம் பெறும் அணிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
இந்நிகழ்ச்சிகளில் தருமபுரி நகர பொறுப்பாளர்கள் நாட்டான் மாது, கௌதமன், ஒன்றிய செயலாளர் காவேரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் குமார் கோவிந்தன், நகர துணைச் செயலாளர் வ. முல்லவேந்தன், மாவட்ட துணைத் தலைவர் ரேணுகாதேவி, மே. அன்பழகன், ஜெகன், காசிநாதன், அ. மாதேஸ்வரன், வெல்டிங் ராஜா, பெருமாள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு போட்டிகளை சிறப்பித்தனர்.

