Type Here to Get Search Results !

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் – வாக்காளர் சேர்க்கை பணிகளை துரிதப்படுத்த ஆலோசனை.


தருமபுரி, ஜன.02:

தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் செயற்குழு கூட்டம் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் கலந்து கொண்டு, No Mapping List-ல் விடுபட்டுள்ள வாக்காளர்களை அடையாளம் கண்டு, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். தேர்தல் பணிகளில் துல்லியத்துடன் செயல்படவும், கள நிலவரத்தை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளவும் பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கி பேசினார்.

இந்த செயற்குழு கூட்டத்தில் அவைத்தலைவர் கே. மனோகரன், மாநில நிர்வாகி சூடப்பட்டி சுப்ரமணி, மூத்த வழக்கறிஞர் டி. சந்திரசேகர், மாவட்ட நிர்வாகிகள் முருகன், ராஜகுமாரி, தேர்தல் பார்வையாளர் அரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஒன்றிய செயலாளர்கள் எம்.வி.டி. கோபால், பி.எஸ். சரவணன், பி.கே. அன்பழகன், முனியப்பன், பிரபு ராஜசேகர் உள்ளிட்டோர், பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்தனர்.


கூட்டத்தின் முடிவில், வரும் நாட்களில் வாக்காளர் சேர்க்கை மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளை திட்டமிட்ட முறையில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies