பொம்மிடி, ஜன.02:
இக்கூட்டத்தில் பொம்மிடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் கலந்து கொண்டு, பொம்மிடியில் கூடுதல் ரயில் வசதி அவசியம் என்பதை தெளிவாக எடுத்துரைத்தனர். குறிப்பாக,
-
கோவை விரைவு வண்டி (12675/12676)
-
திருவனந்தபுரம் விரைவு வண்டி (12695/12696) அல்லது (12623/12624)
-
நாகர்கோவில் விரைவு வண்டி (16339/16340)
-
பெங்களூரு செல்லும் மைசூர்–கோச்சுவேலி விரைவு வண்டி (16315/16316)
-
விவேக் விரைவு வண்டி (22503/22504)
ஆகிய ரயில்களுக்கு பொம்மிடியில் கூடுதல் நிறுத்தம் வழங்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் இரண்டு ரயில்களுக்காவது உடனடியாக நிறுத்தம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில், ரயில்வே உயர் அதிகாரிகள் இந்த கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்ரித் சம்வாத் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மேலும், பொம்மிடி ரயில் நிறுத்தம் தொடர்பாக ரயில்வே போர்டு அல்லது உயர் அலுவலகங்களுக்கு எந்தவொரு பரிந்துரையும் அனுப்பப்பட்டுள்ளதா? என கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்குப் பதிலாக, சேலம் ரயில்வே கோட்டத்திலிருந்து வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ பதில் மனுவில், பொம்மிடி கூடுதல் ரயில் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ரயில்வே போர்டு அல்லது எந்த உயர் அலுவலகத்திற்கும் பரிந்துரை அனுப்பப்படவில்லை என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முன்னிலையில் உறுதியளித்த பின்னரும், அதனை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத சேலம் ரயில்வே கோட்டத்தின் இந்த அலட்சியப் போக்கை, பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. மேலும், பொம்மிடி பகுதி மக்களின் நீண்ட நாள் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவும், கூடுதல் ரயில் நிறுத்தம் பெற தேவையான பரிந்துரைகளை உயர் அலுவலகத்திற்கு உடனடியாக அனுப்பவும் ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.

.jpg)