தருமபுரி, ஜன. 23:
சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, தருமபுரியில் வாசன் கண் மருத்துவமனை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் கண் ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி காவல் ஆய்வாளர் பழனிச்சாமி கலந்து கொண்டு ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும், வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் பிரியா, சரண்யா, ஆர்த்தி, வித்யா ஆகியோர் பங்கேற்று, ஓட்டுநர்களுக்கு தேவையான கண் ஆரோக்கிய ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
சாலை பாதுகாப்பு வாரத்தை சிறப்பிக்கும் வகையில், 11.01.2026 முதல் 11.02.2026 வரை ஆட்டோ, டாக்ஸி, கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வாகன ஓட்டுநர்களுக்கும் இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும், கண் அறுவை சிகிச்சை தேவைப்படும் ஓட்டுநர்களுக்கு, மருத்துவமனை சார்பில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டு கண் பரிசோதனைகளை செய்து கொண்டு பயனடைந்தனர். சாலை விபத்துகளை குறைக்க கண் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிப்பதால், இத்தகைய முகாம்கள் ஓட்டுநர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

.jpg)