தருமபுரி – ஜனவரி 16:
தருமபுரி உழவர் சந்தையில் விவசாயிகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி தலைமையேற்று கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உழவர் சந்தை நிர்வாக இயக்குநர் இளங்கோ மற்றும் துணை வேளாண்மை அலுவலர் பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருநாளை முன்னிட்டு, விவசாயிகள் ஒன்றிணைந்து பொங்கல் படையலிட்டு வழிபாடு நடத்தினர். உழைப்பையும் விவசாயத்தையும் போற்றும் வகையில், சமத்துவம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இந்த விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, தர்ம செல்வன், தருமபுரி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டி. செங்குட்டுவன், நகர கழக செயலாளர்கள் நாட்டான் மாது, கௌதம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார் கோவிந்தன், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ரஹீம், ஒன்றிய செயலாளர்கள் காவேரி, செல்லதுரை, பாளை அன்பழகன், தனசேகரன், அ. மாதேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவசாயிகள், நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று சமத்துவ பொங்கல் விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். விவசாயம் தான் சமூகத்தின் அடித்தளம் என்றும், விவசாயிகளின் உழைப்பை மதித்து அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்றும் விழாவில் வலியுறுத்தப்பட்டது.

.jpg)