தருமபுரி – ஜனவரி 17:
தருமபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) சார்பில், முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த விழா, தருமபுரி மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் தருமபுரி நகர கழகச் செயலாளர் பூக்கடை ரவி, மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் அசோகன், இளைஞரணி சங்கர், ஒன்றிய செயலாளர்கள் சிவபிரகாசம், செந்தில், தகடூர் விஜயன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர், அதிமுக மாவட்டத்தின் சார்பில் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட எம்.ஜி.ஆரின் மக்கள் நலச் சேவைகள் நினைவுகூரப்பட்டு, அவரது வழியில் கட்சி தொடர்ந்து செயல்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

