தருமபுரி, ஜன. 30 :
தருமபுரி மாவட்டத்தில், மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட 35,104 பயனாளிகள் ஆகியோருக்கு, மாதந்தோறும் இல்லத்திற்கே நேரில் பொதுவிநியோகத்திட்டப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 2026 மாதத்திற்குரிய பொதுவிநியோகத்திட்டப் பொருட்கள், 02.02.2026 மற்றும் 03.02.2026 ஆகிய தேதிகளில், தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பொதுவிநியோகக் கடைகளுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், அரசின் அத்தியாவசிய சேவைகள் எளிதில் கிடைக்கச் செய்யப்படுவதாக ரெ. சதீஸ், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். மேலும், தகுதியுள்ள பயனாளிகள் அனைவரும் இந்த அரசுச் சலுகையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
.gif)

.jpg)