தருமபுரி | ஜனவரி 30:
தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில், “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட BLA-2, BDA, BLC ஆய்வு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தருமபுரி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம். பிரபு ராஜசேகர் ஏற்பாட்டில், தருமபுரி, கே. நடுஅள்ளி, செம்மண்டகுப்பம், கோணங்கி நாயகணஅள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட 20 பூத் நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த கூட்டம், தருமபுரி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் கலந்து கொண்டு, “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” பரப்புரையின் கீழ் திருப்பத்தூரில் நடைபெறவுள்ள வடக்கு மண்டல மாநாட்டில் பங்கேற்பது குறித்தும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது குறித்தும் நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தருமபுரி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)