தருமபுரி, ஜன.30:
தருமபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, தமிழ்நாடு கட்டுமான கழகம் மூலம் 40 வகை பயிற்சி பிரிவுகளில் இணைய வழி திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
2025–2026 கல்வி ஆண்டில், முறையான பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு பயிலும் மாணவர்கள்,
-
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் உயர்கல்வி உதவித்தொகை பெற்றவர்கள் அல்லது
-
உதவித்தொகை பெற விண்ணப்பித்தவர்கள்,
ஆகியோரில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் இரண்டு குழந்தைகள் மட்டும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் பங்கேற்க விரும்பும் உயர்கல்வி உதவித்தொகை பெறும் குழந்தைகள், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான
applicationtnbocw.com மூலம் இணைய வழியாக பதிவு செய்யலாம். மேலும், தேவையான அனைத்து அசல் ஆவணங்களுடன், தருமபுரி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் வந்து பயிற்சிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தும் பயன் பெறலாம் என ரெ. சதீஸ், இ.ஆ.ப., தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்கள்..gif)

.jpg)