தருமபுரி, ஜன. 21:
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய மாமன்றம் சார்பில், இலக்கிய பேராசான் ப. ஜீவானந்தம் அவர்களின் 63-வது நினைவு தினம் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு மாமன்றத்தின் தருமபுரி மாவட்ட பொறுப்பாளர் வெ. பை. மாதையன் தலைமை தாங்கினார். இதில் ஜெ. பிரதாபன், ஜி. மாதையன், சத்தியமூர்த்தி, மாணிக்கம், முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ப. ஜீவானந்தத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நல்லம்பள்ளி வட்டம் தியாகி ஆர். பச்சாகவுண்டர் நினைவு இல்லம் முன்பு ப. ஜீவானந்தம் 63-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இலளிகம் கிளைச் செயலாளர் எல்.சி. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் கலந்து கொண்டு, ப. ஜீவானந்தத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் நினைவு தின உரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் காளியம்மாள், கோவிந்தம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக கிளை துணைச் செயலாளர் அலமேலுஎத்துராஜ் நன்றி கூறினார்.

.jpg)