தருமபுரி – ஜனவரி 12:
தருமபுரியில், இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் MY Bharat கேந்திரா, தருமபுரி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா இளைஞர் நற்பணி சங்கம் இணைந்து, ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழாவை சிறப்பாக நடத்தினர்.
விழாவிற்கு ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் நிர்வாக அலுவலர் ஜோதி பாசு வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். முன்னதாக சுவாமி விவேகானந்தர் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செவிலியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேஸ்வரி, தருமபுரி மாவட்ட எச்.ஐ.வி. தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் உலகநாதன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறும், இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் அவரது கருத்துகளும் குறித்து சிறப்புரையாற்றினர். மேலும் கல்லூரி ஆசிரியர்கள் சந்தியா, குமுதா, நந்தினி, ரஞ்சிதா ஆகியோர் மாணவர்களுடன் உரையாடி விழாவை சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்காக பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தருமபுரி மாவட்ட MY Bharat சார்பில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தேசிய இளைஞர் தின உரை தொலைக்காட்சி மற்றும் புரொஜெக்டர் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
விழாவின் நிறைவில் MY Bharat தருமபுரி தேசிய இளைஞர் தொண்டர் பசுபதி நன்றியுரை நிகழ்த்தினார். இந்த தேசிய இளைஞர் தின விழா, மாணவர்களிடையே தன்னம்பிக்கை, சமூகப் பொறுப்பு மற்றும் நாட்டுப்பற்று உணர்வை வளர்க்கும் வகையில் அமைந்தது.

.jpg)