Type Here to Get Search Results !

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஸ்பர்ஷ் தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


தருமபுரி | ஜனவரி 30 :


உலக தொழுநோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் ஸ்பர்ஷ் தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தொழுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, தொழுநோய் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்த மருத்துவ பயனாளிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.


இதனைத் தொடர்ந்து, தொழுநோய்க்கு எதிரான சமூக பொறுப்பை வலியுறுத்தும் வகையில் தொழுநோய் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டு பாராட்டினார்.


ஆண்டுதோறும் ஜனவரி 30-ஆம் தேதி, அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு உலக தொழுநோய் எதிர்ப்பு தினம் இருவார விழாவாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஜனவரி 26 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தொழுநோய் விழிப்புணர்வும், “ஸ்பர்ஷ்” உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.


மேலும், பள்ளிகள், கல்லூரிகள், சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு தொடுதல், சுடுதல், வலிப்பு உணர்வு குறைபாடு, சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்ச்சியற்ற தேமல் போன்ற தொழுநோய் அறிகுறிகள் உள்ளதா என மருத்துவ குழுக்கள் மூலம் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தருமபுரி கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று, கலைநிகழ்ச்சிகள் மற்றும் முழக்கங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட மைய நூலகம் வரை சென்று நிறைவடைந்தது.


மேலும், LCDC (தீவிர தொழுநோய் கண்டறிதல் முகாம்) ஜனவரி 19 முதல் நடைபெற்று வருவதாகவும், சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்ச்சியற்ற தேமல், கை–கால்களில் மதப்பு, நீண்ட நாட்கள் ஆறாத புண்கள், விரல்கள் மடங்குதல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். பொதுமக்கள் வீடு தேடி வரும் களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


இதனைத் தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க, மருத்துவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (தொழுநோய்) மருத்துவர் புவனேஷ்வரிஇணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மருத்துவர் சாந்திதுணை இயக்குநர் (குடும்பநலம்) மருத்துவர் பாரதிதேசிய நல குழுமம் மருத்துவர் ராஜ்குமார் உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies