தருமபுரி | ஜனவரி 26
தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனம் இணைந்து நடத்திய 9-வது தேசிய பூப்பந்தாட்ட சாம்பியன் ஷிப் போட்டி பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளில், திருநெல்வேலி மாவட்டம் சென் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 24.01.2026 முதல் 26.01.2026 வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த போட்டிகளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டு திறம்பட விளையாடினர். பெண்கள் பிரிவு போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் கலந்து கொண்ட தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி K. பிரதிக்ஷா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்களை வென்று வரும் பிரதிக்ஷா, இந்த சாதனையின் மூலம் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விப் படிப்புகள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளுக்கு சிறப்பு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
.gif)

.jpg)