தருமபுரி, ஜன. 30:
தருமபுரி அன்னசாகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில் ராஜகோபுரம் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (30.01.2026) அதிகாலை 4.00 மணியளவில் விநாயகர் கோபுரத்திற்கு மஹா கும்பாபிஷேகமும், விநாயகருக்கு மஹா தீபாராதனையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 9.00 மணியளவில் ராஜகோபுரம், மூலவர் வள்ளி–தெய்வானை உடனாகிய சிவசுப்பிரமணியர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.
விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், உபசார பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சிவசுப்பிரமணியர் – வள்ளி – தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
.gif)

.jpg)