தருமபுரி, ஜன.10:
தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் (2021–2025) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வாயிலாக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் விரிவாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
2021–2025 காலகட்டத்தில்,
-
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.69.14 கோடி மதிப்பீட்டில் 2,339 பணிகள்,
-
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.26.18 கோடி மதிப்பீட்டில் 405 பணிகள்,
-
நமக்கு நாமே திட்டம் (NNT) மூலம் ரூ.14.88 கோடி மதிப்பீட்டில் 239 பணிகள்,
-
தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம் ரூ.22.79 கோடி மதிப்பீட்டில் 41 பணிகள்,
-
PMGSY–III திட்டத்தின் கீழ் ரூ.101.16 கோடி மதிப்பீட்டில் 39 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும்,
-
PMGSY Incentive Grant திட்டத்தில் ரூ.18.55 கோடி மதிப்பீட்டில் 45 பணிகள்,
-
TNRRIS திட்டம் ரூ.22.79 கோடி மதிப்பீட்டில் 41 பணிகள்,
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் ரூ.1,14,490 கோடி மதிப்பீட்டில் 98,747 பணிகள்,
-
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் ரூ.32.79 கோடி மதிப்பீட்டில் 20,309 கழிப்பறை பணிகள்,
-
பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் மூலம் ரூ.7,748.4 கோடி மதிப்பீட்டில் 6,457 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
அதேபோல்,
-
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ரூ.125.56 கோடி மதிப்பீட்டில் 2,217 பணிகள்,
-
நபார்டு – பள்ளிக் கட்டிடங்கள் திட்டம் ரூ.2.42 கோடி மதிப்பீட்டில் 11 பணிகள்,
-
நபார்டு – சாலைகள் மற்றும் பாலங்கள் திட்டம் ரூ.98.28 கோடி மதிப்பீட்டில் 62 பணிகள்,
-
மாநில நிதி திட்டம் மூலம் ரூ.3.83 கோடி மதிப்பீட்டில் 1 உயர்மட்ட பாலம்,
-
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் (MGSMT) ரூ.159.57 கோடி மதிப்பீட்டில் 318 பணிகள்,
-
MGSMT சேமிப்பு நிதி திட்டம் ரூ.10.01 கோடி மதிப்பீட்டில் 1 பணி,
-
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ரூ.232.53 கோடி மதிப்பீட்டில் 7,485 வீடுகள்,
-
ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் திட்டம் (RRH) ரூ.25.03 கோடி மதிப்பீட்டில் 3,041 பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த திட்டங்களின் மூலம் தருமபுரி மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் அடிப்படை வசதிகள், சாலை இணைப்புகள், வீடமைப்பு மற்றும் வாழ்வாதார முன்னேற்றம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

