தருமபுரி, ஜன. 25:
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு, தருமபுரி நகர போக்குவரத்து காவல் துறை, மாவட்ட போக்குவரத்து துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) மற்றும் தொடர்புடைய துறைகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பது, தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் பயன்பாடு, வேகக் கட்டுப்பாடு, மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் அபாயங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் போது, தருமபுரி நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர், போக்குவரத்து துறை அலுவலர்கள், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடம் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
சாலை பாதுகாப்பு என்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்; விதிகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என அலுவலர்கள் வலியுறுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியால் பேருந்து நிலையம் முழுவதும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பரவியது.
.gif)

.jpg)