தருமபுரி, ஜன.02:
அதன் தொடர்ச்சியாக, 2025 ஆம் ஆண்டிற்கான சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா, வரும் 08.01.2026 அன்று மாலை 4.00 மணிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், சிறுபான்மையினருக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், அவற்றை மேலும் திறம்பட செயல்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பாக தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

.jpg)