நல்லம்பள்ளி,ஜன. 10:
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத் தொழிலாளர் சங்கம் சார்பில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும், புதியதாக கொண்டு வரப்பட்ட VB-G RAM G(G) திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஒன்றிய அரசை கண்டித்து பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.
நல்லம்பள்ளி வட்டம் இலளிகம் கிராமத்தில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், சங்க ஒருங்கிணைப்பாளரும் இலளிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஜெ. பிரதாபன் பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு இலளிகம் சங்க குக்கிராம ஒருங்கிணைப்பாளர் அலமேலு எத்துராஜ் தலைமை வகித்தார்.
இந்த பிரச்சார இயக்கத்தில் சங்க ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் ஜி. மாதையன், எல்.சி. கிருஷ்ணன், என்.பி. ராஜி, ஜி. ராஜகோபால், ஆர். மல்லையன், ஜெ. காளியம்மாள், ராணிதுரைசாமி, நீலாநாகராஜன், பழனியம்மாள், பலராமன், மாது, செந்தில் உள்ளிட்டோர் மற்றும் தேசிய ஊரக வேலை அட்டை பெற்ற கிராமப்புற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இலளிகத்தில் தொடங்கிய பிரச்சாரம் இந்திரா நகர், சின்னரெட்டியள்ளி, மிட்டாரெட்டியள்ளி, சின்னரெட்டியள்ளி ஆதிதிராவிடர் குடியிருப்பு, தின்னஅள்ளி, தின்னஅள்ளி ஆதிதிராவிடர் குடியிருப்பு, அருந்ததியர் குடியிருப்பு, கே.புதூர், கொமத்தம்பட்டி, பூமரத்தூர், வத்தல்மலை அடிவாரம், வத்தல்மலை கொட்டலாங்காடு, சின்னங்காடு, சஞ்சீவ் நகர், பால்சிலம்பு உள்ளிட்ட கிராமங்களில் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கைகள் வழங்கி மேற்கொள்ளப்பட்டது.

